Enable Javscript for better performance
4 இடங்களில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    4 இடங்களில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இலவச முன் பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.

    ஜூன் 10 ஆம் தேதிமுதல் ஜூலை 22 ஆம் தேதிவரை சனி, ஞாயிறு தவிர அனைத்து வேலைநாள்களிலும் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மகளிர் பள்ளிகள் ஆகியவற்றில் பயிற்சி நடைபெறுகிறது. எனவே, குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்பம் செய்ததற்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் 10 ஆம் தேதி பயிற்சி நடைபெறும் மையங்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai