சுடச்சுட

  

  4 கழிவு நீர் சேகரிப்பு வாகனம் வாங்க நிதி: எம்.பி.யிடம் மேயர் கோரிக்கை

  By தூத்துக்குடி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாநகராட்சிக்கு நான்கு கழிவுநீர் சேகரிப்பு வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு எம்.பி.யிடம் மாநகராட்சி மேயர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

   தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜிக்கு மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

   60 வார்டுகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருவதோடு பெருகி வரும் மக்கள் தொகை கொண்ட மாநகரமாகவும் உள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க இயலாத பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு மாநகராட்சியில் போதிய வாகனங்கள் இல்லாத நிலை உள்ளது.

   இதனால், சில சமயங்களில் பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளின் விமர்சனத்திற்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இப் பிரச்னைக்கு தீர்வு கானும் விதமாக மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் காணப்படும் சிறிய தெருக்கள் மற்றும் வாகனங்கள் செல்லமுடியாத சந்துக்களில் கழிவுநீரை அகற்ற ஏதுவாக சிறிய அளவிலான கழிவு நீர் உறிஞ்சி வாகனம் தேவைப்படுகிறது.

    எனவே, மண்டலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் நான்கு சிறிய கழிவு நீர் சேகரிப்பு வாகனங்களை தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai