சுடச்சுட

    

    அகில இந்திய கைப்பந்து: கேரள போலீஸ் அணி வெற்றி

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் அகில இந்திய கைப்பந்துப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 24ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

    2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில், கேரள போலீஸ் அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. இப்போட்டியை தூத்துக்குடி எம்.எல்.ஏ. சி.த. செல்லப்பாண்டியன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் ராஜகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

     பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு ரயில்வே அணி கைப்பற்றியது. இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரள போலீஸ் அணி 25-14, 26-24, 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் 3 செட்டுகளையும் கைப்பற்றி 3-1என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டத்தில் கேரள போலீஸ் அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai