சுடச்சுட

    

    விளாத்திகுளம்-மதுரை நெடுஞ்சாலையில் காரும்-பைக்கும் செவ்வாய்க்கிழமை மோதிகொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    விளாத்திகுளம், நாகலாபுரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் ஜெயபால் (23), பிச்சைபாண்டியன் மகன் விஜயபாண்டி (17). கூலித் தொழிலாளர்களான இருவரும் செவ்வாய்க்கிழமை பைக்கில் நாகலாபுரத்திலிருந்து விளாத்திகுளத்துக்கு சென்று கொண்டிருந்தனராம். அம்பாள் நகர் அருகே செல்லும்போது, எதிரில் விளாத்திகுளத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த காரும், பைக்கும் மோதியதாம்.  இதில், பைக்கில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.கார் ஓட்டுநர் கண்ணனுக்கும் (35) காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்ததும் விளாத்திகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் பொன்.பிச்சையா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai