Enable Javscript for better performance
சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகள்: மேயர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகள்: மேயர் ஆய்வு

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை  ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டு பகுதியில் உள்ள லூர்தம்மாள்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் தார்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து, 16ஆவது வார்டு பகுதியான சுப்பாதெருவில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயை உயர்த்துவது குறித்து நேரில் பார்வையிட்டு மேயர் ஆய்வு செய்தார். மேலும், அந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், பாண்டுரங்கன் தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டட முதல்தளம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, துணை மேயர் பீ.சேவியர், மாமன்ற உறுப்பினர் மெஜீலா, மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிநாதன்,  அதிமுக இளைஞரணி நிர்வாகி ஏபிஆர் கவிஅரசு ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai