சுடச்சுட

    

    மத்திய அரசின் நிலஸ்ரீக் கையகப்படுத்துதல் திருத்த சட்டத்தை திரும்பப் பெற கோரியும், நெற்பயிருக்கு தண்ணீர் வழங்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆறுமுகனேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் மு.தமிழ்மணி தலைமை வகித்தார். குருகாட்டூர் ஊராட்சித் தலைவர் மு.ஜேம்ஸ், வரண்டியவேல் பெ.மகராஜன், குரும்பூர் மு.தியாகராஜன், பா.விஜயநாராயணபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.சிவகுமார் (புறையூர்), நீல்புரம் கிருஷ்ணன், அம்மன்புரம் துரைபாண்டியன், ரமேஷ், ஜெ.ரஞ்சித், சின்னத்துரை  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai