சுடச்சுட

    

    திருச்செந்தூரில் இன்று நடைபெற இருந்த திமுக போராட்டம் வாபஸ்

    By திருச்செந்தூர்  |   Published on : 10th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    திருச்செந்தூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி 175-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள்ள நிலையில், குடிநீர் இணைப்பு வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே பேரூராட்சி பகுதியில் தற்போது ரூ. 5.34 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய சாலை அமைத்த பின்னர், குடிநீர் இணைப்பு வழங்கினால் சாலை சேதப்படுத்தப்படும். எனவே, சாலை பணிகள் நடைபெறுவதற்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 4ஆவது வார்டு திமுக சார்பில் புதன்கிழமை (ஜூன் 10) பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிடப்போவதாக வார்டு செயலர் மா.சுரேஷ் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக 72 பேருக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி செயல் அலுவலர் ச.கண்ணன் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai