Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பரணிதரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் சந்திரன் முன்னிலை வகித்தார். கோட்டச் செயலர் ஹரிபாலகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி,  சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி அல்போன்ஸ் லிகோரி உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தின்போது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும்; பணி நீக்க காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், சாலை பராமரிப்புப் பணிகளை அரசே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai