சுடச்சுட

    

    தூத்துக்குடி கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரம்

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நாட்டுப் படகில் இருந்து தவறிவிழுந்த மீனவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி தருவைகுளம் சூசைமரியான் நகரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் அந்தோணி மோகன்தாஸ் (21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மரிய குணசேகரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் 5 பேருடன் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். இந்நிலையில், தருவைகுளம் கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 27 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தோணி மோகன்தாஸ் எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர்.

    இருப்பினும், ராட்சத அலை அடித்ததால் அந்தோணி மோகன்தாஸ் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டாராம். இதுகுறித்து படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக தருவைக்குளத்தில் உள்ள கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காணாமல் போன மீனவரை மீட்கும் பணியில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai