சுடச்சுட

  

  தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

  By சாத்தான்குளம்  |   Published on : 10th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளம் முஹம்மதியா முஸ்லிம் நல்வாழ்வுச் சங்க 5ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா  நடைபெற்றது.

  பொறியாளர் ஹெச். பாரூக் அலி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஏ. அம்ஜத்துல் ஹசன் முன்னிலை வகித்தார். எம்.ஏ. இஸ்மாயில் ஷயிது வரவேற்றார். இதில், ஓய்வு பெற்ற ஆசிரியர் மகாபால்துரை, டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாந்தராஜா, புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மெர்சி ஆண்டனி, தூய இருதய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ், ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், வானொலி முன்னாள் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் பேசினர்.

  தொடர்ந்து சாத்தான்குளத்தில் உள்ள 5 பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர், இஸ்லாமிய சமுதாயத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ராதாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், உடன்குடி பேரூராட்சித் தலைவர் எம். ஆயிஷா கல்லாசி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

  இதில் தொழிலதிபர் கே.எஸ். ராமலிங்கம், வடக்கு பள்ளிவாசல் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். அப்துல் வதூத், டாக்டர் முஹம்மத் முஹைதீன், இப்ராகீம் நடுநிலைப் பள்ளித் தாளாளர் யூ. முஹம்மது ஹலீம், சங்கச் செயலர் எஸ். ஹாஜி முஹம்மத், துணைத் தலைவர்கள் இம்திகாப் மீரான், முஹம்மத் அப்துல் பாஸித், பேரூராட்சி உறுப்பினர் எஸ். முஹம்மது இஸ்மாயில், துணைச் செயலர் எஸ். முஹைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர் ஏ. பாபு சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எஸ்.ஹெச். நிஜாமுதீன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai