சுடச்சுட

    

    நாசரேத் மின் அலுவலகத்தில் உதவி பொறியாளர் நியமிக்க கோரிக்கை

    By சாத்தான்குளம்  |   Published on : 10th June 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத் மின் அலுவலகத்தில் உதவி பொறியாளர் இல்லாததால் மின் இணைப்பு பெறுவது பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    நாசரேத் மின் அலுவலகத்தில் கடந்த ஓராண்டாக உதவி மின் பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு உதவி பொறியாளர் நியமிக்கப்படாததால் மெஞ்ஞானபுரம் உதவி மின் பொறியாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

    இவர் வாரத்துக்கு இருமுறை நாசரேத் வந்து செல்கிறார். இதனால் நாசரேத் பகுதி மக்கள் புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு  அலுவலக மின் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து  விண்ணப்பித்து  காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள்  சிரமமடைந்து வருகின்றனர். நாசரேத் மின் அலுவலகத்துக்கு உடனடியாக உதவி பொறியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai