Enable Javscript for better performance
பாரதிய கிசான் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதிய கிசான் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 10th June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

     இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேசு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், 2013-14 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்.

     விளாத்திகுளத்தில் விவசாயிகள் வத்தல் இருப்பு வைப்பதற்கு வசதி செய்துதர மாநில அரசு முன்வர வேண்டும். தனியார் கல்வி நிலையத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். தென் தமிழகத்தில் ஓடும் வைகை, குண்டாறு, வைப்பாறு, தாமிரவருணி ஆகிய ஆறுகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு மானியம் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், தாமோதரக்கண்ணன், வரதராஜ், ராமையா, கண்ணன், ஜவஹர், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றியத் தலைவர் ராமானுஜம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai