Enable Javscript for better performance
வசவப்பனேரி பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    வசவப்பனேரி பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

    By சாத்தான்குளம்  |   Published on : 10th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி  ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இக்கோயிலில் ஜீர்ணோத்தாரண ஸம்பரோசண  மகா கும்பாபிஷேகம், நூதன நம்மாழ்வார், ராமானுஜர் பிரதிஷ்டை விழா ஆகியன ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதிவரை 4 நாள்கள் நடைபெற்றன.  முதல் நாள் விஸ்வக்சேன ஆராதனம், திவ்யபிரபந்த  பாராயணங்கள் தொடக்கம், 2 ஆம் நாள் யாகசாலை பிரவேசம், கும்ப, மண்டல, பிம்ப அக்னியாதி சதுஸ்நான பூஜைகள், தான்யாதி வாஸம், பூர்ணாஹுதி, சாத்துமுறை கோஷ்டி, 3ஆம் நாள் மாநோன்மான் சாந்தி ஹோமம், மகா அபிஷேகம், 108 கலச மகாபிஷேகம், ரக்ஷா பந்தனம், அஷ்டபந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், 4 ஆம் நாள் மகா பூர்ணாஹுதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயணபெருமாள், கருடன், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai