சுடச்சுட

    

    வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய வேளாண்மை அறிவியல் அகாதெமி நடத்திய தேசிய அளவிலான இளைஞர் மாநாட்டில் மீன்வளக் கல்லூரி மாணவர் செ. கார்த்திக் கட்டுரைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    தில்லியில் உள்ள தேசிய வேளாண்மை அறிவியல் அகாதெமி சார்பில் ஹரியாணா மாநிலம் கர்நூலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், நாடுமுழுவதும் உள்ள 40 வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதுநிலை மாணவர் செ. கார்த்திக் எழுதிய "என் தொழில் விவசாயம்' என்ற கட்டுரைக்கு இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் பெற்றார். இதேபோல, தில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண்மை அறிவியல் அகாதெமியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியிலும் கார்த்திக் கலந்துகொண்டு பேசினார்.

    இதையடுத்து, மாணவர் கார்த்திக்குக்கு வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேராசிரியர் சா. சுவாமிநாதன் வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் கார்த்திக்கை மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai