Enable Javscript for better performance
ஸ்பெயின் பல்கலை.யுடன் மீன்வளக் கல்லூரி ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்பெயின் பல்கலை.யுடன் மீன்வளக் கல்லூரி ஒப்பந்தம்

    By தூத்துக்குடி  |   Published on : 10th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்பெயின் நாட்டில் உள்ள லாஸ் பால்மாஸ் டி கிரான் கெனேரியா பல்கலைக்கழகத்துடன் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஸ்பெயின் நாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து ரோஸாரியோ பெரியல், சதாசிவம் கெளசிக், மேரி சோல், இகுயர்டோ, ரிகார்டோ ஹாரோன் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே பரஸ்பர கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உள்ள அனைத்து துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும், வர்த்தக இறால் பண்ணையையும் ஸ்பெயின் குழுவினர் அண்மையில் பார்வையிட்டனர். அப்போது ஸ்பெயின் பல்கலைக்கழக கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து  மீன்வளக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    இது குறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் கூறியது: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளைக் கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்டு, விரைவில் கூட்டு முயற்சியில் திட்டங்கள் நிறைவேற்ற ஸ்பெயின் நாட்டு குழுவினர் உறுதி அளித்தனர்.

    இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதுநிலை மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சியில் ஆராய்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுதல் முதலியவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai