சுடச்சுட

  

  ஆறுமுகனேரி ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

  விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிளக்கு பூஜையும், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன.

  திங்கள்கிழமை பகலில் குடியழைப்பு பூஜையும், இரவில் அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றன. நள்ளிரவில் சாஸ்தா பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  செவ்வாய்க்கிழமை காலை ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவில் பாரதிநகர் ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயிலிலிருந்து விரதமிருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. நள்ளிரவில் சாமக்கொடை சிறப்பு பூஜை நடைபெற்றது.

  புதன்கிழமை அம்மன் கும்பம் எடுத்து நகர் வலம் வருதலும், படைப்பு தீபாராதனையும் நடைபெற்றன. இதில்,திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai