சுடச்சுட

  

  இந்திய மாணவர் சங்கம்,  தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தமிழக அரசு மற்றும் கல்வித் துறை கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் கட்டாய நன்கொடை வசூலை தடுக்கவேண்டும். அரசுப் பணிகளை பாதுகாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகேசப்பாண்டியன் தலைமை வகித்தார்.

  மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகக்கனி முன்னிலை வகித்தார். அனைத்திந்திய  மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் விஜயலட்சுமி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் சக்திவேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் கார்த்திக், இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு சாந்திலட்சுமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலர் சுரேஷ்பாண்டியன் முடித்து வைத்தார். இதில், இந்திய மாணவர் சங்கத்தினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai