கழுகுமலையில் திருவள்ளுவர் கழகக் கூட்டம்
By கோவில்பட்டி | Published on : 11th June 2015 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கழுகுமலையில் திருவள்ளுவர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் நாறும்பூநாதன், மதுரை பாரதி சின்னமாடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
இதில், கழுகுமலை கோயில் நிர்வாக அலுவலர் தமிழானந்தன், கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செம்மை நதிராஜா, சேதுராஜ், கருப்பசாமி, தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிருஷ்ணன் வரவேற்றார். ராஜாமணி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் மாணிக்கம், செயலர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.