சுடச்சுட

  

  கோவில்பட்டியில் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 11th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

  கலந்தாய்வில் அதிகரித்து வரும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், ஆசிரியர் விரோதப்போக்கு ஆகியவற்றை களைய வேண்டும்.

  காலிப் பணியிட விவரங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக அறிவிப்புப் பலகையில் கலந்தாய்வின் 5 நாள்களுக்கு முன்பாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். மாவட்ட மாறுதல் கலந்தாய்வை முன்புபோல் மாவட்ட கலந்தாய்வு மையங்களில் நடத்தியதுபோல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி வட்டாரத் தலைவர் பாரத்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். வட்டாரச் செயலர் சகாயராஜ், பொருளாளர் நடராஜன் உள்பட கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

  ஸ்ரீவைகுண்டம்: இங்கு வட்டாரத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலர் பாப்ஹையஸ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் அருள்ஜோசப் விளக்கிப் பேசினார். வட்டாரப் பொருளர் தாம்சன் செல்லப்பா நன்றி கூறினார்.

  விளாத்திகுளம்: விளாத்திகுளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் பி. சுப்புராஜ் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ஆ. முத்துமணி, பொருளாளர் மு.க. இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விளாத்திகுளம் வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai