சுடச்சுட

  

  கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

  By கோவில்பட்டி  |   Published on : 11th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, சாலை விதிகள் அடங்கிய துண்டுப்பிரசுர விநியோகம் நடைபெற்றது. கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடத்திய இதற்கான நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. முரளிரம்பா தலைமை வகித்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டுப்பிரசுர விநியோகத்தைத் தொடங்கிவைத்தார்.

  இதில், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, பொறுப்பாளர் சேர்மராஜன், ரோட்டரி சங்க துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ்  நாராயணசாமி, இலக்கிய உலா ரவீந்தர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai