சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே இரு தரப்பினர் மோதல்: 2 பேர் கைது

    By சாத்தான்குளம்  |   Published on : 11th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே   இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

    சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுதுரை (60). இவர், அதே ஊரில் உள்ள பொதுப்பாதையை மூடி வைத்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மரியதங்கையா மனைவி இருதயம்அம்மாள் (63) என்பவருக்கும் இடையே பிரச்னை உள்ளதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருதயம்அம்மாள் அந்த பாதை வழியாக நடந்து சென்றாராம். அப்போது ஜேசுதுரை அவரை அவதூறாகப் பேசினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜேசுதுரை, அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருதயம்அம்மாள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் ரசலையன் வழக்குப் பதிந்து ஜேசுதுரையை கைது செய்தார். இதற்கிடையே புளி வியாபாரியான ஜேசுதுரை மகன் ராஜேஷ் (28) வியாபாரத்தை முடித்துவிட்டு ஊருக்கு பைக்கில் வந்தாராம். அப்போது அவரை மரியதங்கையாவின் மகன்கள் எட்வர்ட், ரூபர்ட் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

    இதுகுறித்து ராஜேஷ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ரூபர்ட்டை புதன்கிழமை கைது செய்தனர். எட்வர்ட்டை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai