Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட துரித உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட துரித உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

    By தூத்துக்குடி  |   Published on : 11th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட துரித உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ம. ரவிகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    நூடுல்ஸ் போன்ற துரித உணவுப் பொருள்களில் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அதிகளவு வேதிப் பொருள்கள் கலந்திருப்பது, தமிழக அளவில் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் கண்டறியப்பட்டது.

    அதனடிப்படையில் உணவுப் பாதுகாப்பு ஆணையரின் ஆணையின்படி ஆறு வகையான துரித உணவுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரிக்கவோ, இருப்பு வைக்கவோ, விநியோகம் செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ ஜூன் 4 ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட துரித உணவுப் பொருள்களின் தயாரிப்பாளர்கள் தங்களின் விநியோகஸ்தர்கள், இருப்பு வைப்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து உடனடியாக அவற்றை திரும்பப் பெறும்படி உத்தரவிடப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற தடை செய்யப்பட்ட துரித உணவுகளை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பொதுமக்களும், நுகர்வோரும் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தால் உடனே உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 0461-2340699 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

    இதற்கிடையே, தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடைசெய்யப்பட்ட துரித உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai