சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ரூ.1.10 கோடியில் இணைப்பு பாலம்

    By தூத்துக்குடி  |   Published on : 11th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் ரூ.1.10 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள இணைப்பு பாலத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி பக்கிள் ஓடை பகுதியில் கேவிகே நகரில் இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையில் சிறிய அளவிலான பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து கேவிகே நகரில் ரூ.1.10 கோடியில் இணைப்பு பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கு புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    இதில், மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ்,  ஆணையர் சோ. மதுமதி, மாநகராட்சிப் பொறியாளர் ராஜகோபாலன், மேற்கு மண்டலத் தலைவர் ஜெயபாரதி மனோகரன், உதவி ஆணையர் சரவணன், மாமன்ற உறுப்பினர் முபாரக் ஜாண், அதிமுக இளைஞரணி நிர்வாகி ஏபிஆர் அந்தோணி கவிஅரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து தூத்துக்குடி சிவ அரசு தொடக்கப் பள்ளியில் புதிய சத்துணவுக் கூடம் கட்டும் பணியை தொடங்கிவைத்த மேயர், லயன்ஸ் டவுனில் ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச் சாலைப் பணிகளையும் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai