சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி (53). விவசாயியான இவர், முக்காணி சென்று விட்டு புதன்கிழமை இரவு அத்திமரப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் மாடசாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே  மாடசாமி உயிரிழந்தார்.

    தகவலறிந்து அங்கு சென்ற முத்தையாபுரம் போலீஸார் மாடசாமி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அத்திமரப்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai