சுடச்சுட

    

    நான்குனேரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், கீழப்புத்தனேரி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் திரவியராஜ் (40).  இவர், தனது பைக்கில் நான்குனேரி அருகே சிங்கனேரி பகுதியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாராம். அப்போது இவரது பைக்கும், எதிரே வந்த பைக்கும் நேருக்குநேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

     இதில் திரவியராஜும், மற்றொரு பைக்கில் வந்த நாஞ்சான்குளத்தைச் சேர்ந்த கணேசனும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திரவியராஜ் இறந்தார். கணேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நான்குனேரி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai