சுடச்சுட

  

  நீதிமன்ற வளாகத்தில் வாகனக் காப்பகம்: ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு

  By தூத்துக்குடி  |   Published on : 11th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வாகனக் காப்பகம் கட்ட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியனுக்கு வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

  தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இருந்தபோதிலும் முறையாக நிறுத்த வழியில்லாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து, வாகனக் காப்பகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

  இதையடுத்து, வாகனக் காப்பகம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கீடு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியனை செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் தா.மி. பிரபு தலைமையில், அதன் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

  அப்போது, வழக்குரைஞர் சங்கச் செயலர் கணபதி சுப்பிரமணியன் முத்துசாமி, பொருளாளர் சுபாஷினி மற்றும் வழக்குரைஞர்கள், அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai