சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    By கோவில்பட்டி  |   Published on : 11th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி விஸ்வகர்மா நகைத் தொழிலாளர் சங்கம் சார்பில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு சங்கத் தலைவர் வீரபுத்திரன் தலைமை வகித்து பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர், மாணவிகளான பார்வதி, மகாராஜா, ஆர்த்தி மற்றும் 10ஆம் வகுப்பில் சிறப்பிடம்பெற்ற மாணவிகள் மகாலட்சுமி, செல்வமணி, ஐஸ்வர்யா ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிப் பேசினார்.

    சங்கப் பொருளாளர் ஸ்ரீனிவாசன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்கச் செயலர் கணேசன் வரவேற்றார். ஆலோசகர் வாசுதேவன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai