Enable Javscript for better performance
மணப்பாடு பள்ளியில் கல்வி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    மணப்பாடு பள்ளியில் கல்வி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

    By உடன்குடி  |   Published on : 11th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணப்பாட்டில் செயல்படும் மணவை அகாதெமி சார்பில், புனித வளன் பள்ளியில் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் மனோகர் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் இருதயராஜ் அடிகள் ஆசியுரை வழங்கினார். கருத்தரங்கில் தூத்துக்குடி லசால் பள்ளித் தலைமையாசிரியர் பெப்பின், பள்ளித் தொழில் நிறுவனங்களின் ஆளுமைப் பயிற்சி ஊக்குநர் நெல்சன் எஸ்தர் ஆகியோர் வழிகாட்டல் குறித்தும், பல்வேறு திறன்களை, தலைமைப் பண்புகளை வெளிக்கொண்டு வருவது குறித்தும் பயிற்சியளித்தனர்.  உயர் கல்வி படிப்புகள், பயன்கள், வேலைவாய்ப்புகள், விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கடன்கள் ஆகியவை குறித்து கன்னியாகுமரி திருப்புமுனை அமைப்பின் இயக்குநர் அன்றோ சேவியர் விளக்கினார்.

    பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி சிலுவைமேரி, மாணவர் எபினேஷ் மற்றும் 13 பேருக்கு பரிசுகளை அலைச்சறுக்கு விளையாட்டு மைய இயக்குநரும்,தொழிலதிபருமான அருண்மிராண்டா வழங்கினார். ஆசிரியர் ஜீவன் வரவேற்றார். ஏற்பாடுகளை மணவை அகாதெமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai