சுடச்சுட

  

  வல்லநாடு நீரேற்று நிலையப் பகுதியில் குழாய் உடைப்பு உடனடியாக சீரமைப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 11th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வல்லநாடு நீரேற்று நிலையப் பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பு, செவ்வாய்க்கிழமை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு, வல்லநாட்டில் இருந்து மூன்று பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில், 3 ஆவது பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறியதால் குடிநீர் வரத்து பாதிக்கப்பட்டது.

  இதையடுத்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்யும் முயற்சியை, மேயர் ஏபிஆர் அந்தோணிகிரேஸ் தலைமையில் வடக்கு மண்டல ஆணையர் சரவணன், ஃபிட்டர் கணபதி மற்றும் குடிநீர் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர். வல்லநாடு அருகே கரடிக்குளம் பகுதியில் மலை முகவாட்டில் உடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குடிநீர்க் குழாய் உடைப்பு செவ்வாய்க்கிழமை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

  இதுகுறித்து மேயர் கூறியதாவது: கோடைக்காலத்தில் வழக்கமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவது வாடிக்கை. இந்த நிலைமை மாறும் வகையில், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வல்லநாடு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 12 கிணறுகள் தூர்வாரப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோடைக்காலத்திலும் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

  இப்போது கரடிக்குளம் பகுதியில் ஏற்பட்ட குடிநீர்க் குழாய் உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டதால் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai