சுடச்சுட

  

  தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி வாலிபால் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வருமானவரித் துறை அணி வெற்றி பெற்றது.

  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் மெர்க்கன்டைல் வங்கிக் கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி வாலிபால் போட்டி தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 ஆம் நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயக்குநர் மகேந்திரவேல், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழக புரவலர்கள் உதயசங்கர், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் மும்பை மேற்கு ரயில்வே அணியும், தில்லி இந்திய வருமான வரித் துறை அணியும் மோதின.

  இதில், வருமான வரித் துறை அணி இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai