சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை இறந்தார்.

    கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ப.ஆறுமுகம் (63). இவர், செவ்வாய்க்கிழமை வைரவம் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினாராம். அப்போது தட்டார்மடம் அருகே அவர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில், பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai