சுடச்சுட

    

    2 இடங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்

    By தூத்துக்குடி  |   Published on : 11th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரண்டு இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வட்டத்தில் கொப்பம்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் நாகலாபுரம் கிராமத்திலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்புச் சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai