Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது - Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

     சாத்தான்குளம் தச்சமொழி மதுபானக் கூடத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்கப்படுவதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தச்சமொழி நாடார் தெற்கு தெருவைச் சேர்ந்த சு.இசக்கிமுத்துவை (20) கைது செய்து, 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்ரபாக மேலும் நெடுங்குளத்தைச் சேர்ந்த அ. பெஞ்சமின் என்பவரையும்  போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai