சுடச்சுட

    

    விளாத்திகுளம் வட்டம் கந்தசாமிபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டாட்சியர் செல்வகுமார் தலைமை வகித்தார். கோவில்பட்டி  கோட்டாட்சியர் கண்ணபிரான், கந்தசாமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பங்கேற்று, 54 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவித்தொகையும், 7 பேருக்கு உள்பிரிவு பட்டாவும், 2 பேருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் கோழி வளர்ப்பதற்கான அரசு மானியதொகைக்கான காசோலையும், வேளாண்துறை மூலம் 2 பேருக்கு விசை தெளிப்பான்கள், புதுவாழ்வு திட்டம் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அமுத சுரபி கூட்டமைப்பு கடன்களையும், 1 மாற்றுதிறனாளிக்கு ரூ. 10 ஆயிரம் தனிநபர் கடனையும், கால்நடைத்துறை மூலம் 5 மகளிருக்கு புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் தலா 40 நாட்டுக்கோழி குஞ்சுகளையும்  வழங்கிப் பேசினார்.

    பின்னர் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

     இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஞானசேகரன், வட்டாட்சியர் கணேசன், கால்நடைத்துறை இணை இயக்குநர் ஜெயராமன், வேளாண் துறை இணை இயக்குநர் ஜெயகுமார், புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தனஞ்செயன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai