Enable Javscript for better performance
தகராறு: இளம்பெண் கைது - Dinamani

சுடச்சுட

    

    கழுகுமலை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய இளம் பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     கழுகுமலையையடுத்த ராமநாதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி வீரலட்சுமி(32). அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் பராசக்தி(30). இவ்விரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது பராசக்தி, வீரலட்சுமியை கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, பராசக்தியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai