சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை  உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சிதம்பராபுரத்தில் பொதுப்பாதையை அடைத்து வைத்துள்ளதாக இரு பிரிவினரிடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இருதய ராஜ் மகன் கட்டடத் தொழிலாளி குமார் (43). இவர் புதன்கிழமை பண்டாரபுரம் விலக்கில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது சிதம்பராபுரம் அல்பர்ட் மனைவி தனியார் பள்ளி ஆசிரியை ரோஸ்ஜெயா, ஜேசுதுரை மகன் ராஜேஷ் மற்றும் இருவர் உள்பட 4 பேர் அவரை வழிமறித்து பாதை தொடர்பாக தகராறு செய்து, குமாரை தாக்கி மிரட்டினராம்.

    இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரசலையன் வழக்குப் பதிந்து ரோஸ்ஜெயா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai