தொழிலாளி தற்கொலை
By திருச்செந்தூர் | Published on : 12th June 2015 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செந்தூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் அருகே உள்ள மாவீரன் நகரைச் சேர்ந்தவர் பழனி (40) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிக்கு கடந்த 8 ஆண்டுகளாக ரத்த அழுத்த நோய் இருந்து வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.