Enable Javscript for better performance
\\\"பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்'

    By தூத்துக்குடி  |   Published on : 12th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ. 40 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.

    ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்க பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40- கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கெனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai