சுடச்சுட

  

  மீன்வளத் துறை வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By தூத்துக்குடி  |   Published on : 12th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். தூத்துக்குடி அருகேயுள்ள சக்கம்மாள்புரத்தில்  செயல்பட்டுவரும் தனியார் அலங்கார மீன் பண்ணையை அவர் பார்வையிட்டார்.

   தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து 25 சதவீதி மானியத்துடன் ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த மீன் பண்ணையில் 100 மீன்வளர்ப்புத் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு, 60 வகையான சிக்லிட் இன அலங்கார மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

   இந்தப் பண்ணையில் வளர்க்கப்படும் அலங்கார மீன்கள் கொல்கத்தா, மும்பை, கொச்சின், பெங்களூரு மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இதையடுத்து, மாரமங்கலம் கிராமத்தில் பொன்ராஜ் என்பவருக்கு  சொந்தமான மீன்விதைப்பண்ணையை ஆட்சியர் பார்வையிட்டார்.

   இதுகுறித்து பொன்ராஜ் கூறுகையில்,  கடந்த 4 ஆண்டுகளாக நன்னீர் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுவருவதாகவும் 2012-2013 ஆம் ஆண்டில் தரமான மீன்குஞ்சுகள் ஆண்டு முழுவதும் கிடைத்திடும் நோக்கத்துடன்,  தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் மீன்விதைப்பண்ணையை அமைத்ததாகவும் தெரிவித்தார்.

   இந்த ஆய்வின் போது,  மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர்,  உதவி இயக்குநர்கள் ஐசக் ஜெயக்குமார், சிவகுமார், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் விஜயராகவன்,  அன்ட்ரிபிரின்ஸி வைலா, சுற்றுலா அலுவலர் சீனிவாசன்,  மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள்  சி.குமார்,  தே.ராம்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai