சுடச்சுட

    

    முளைப்பாரி ஊர்வலத்தில் தகராறு: இருவர் கைது

    By கோவில்பட்டி  |   Published on : 12th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே முளைப்பாரி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டுத் தெரு காளியம்மன் கோயிலில் திருவிழாவையொட்டி புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றதாம். அப்போது யாரும் சமுதாய பாடல்களை பாடக் கூடாது என போலீஸார்  ஏற்கெனவே கூறியுள்ளனர். இந்நிலையில், முளைப்பாரி ஊர்வலத்தில் சென்ற கூசாலிபட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் கதிர்வேல்(20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த க.சுந்தர்(20) ஆகிய இருவரும்  ஊர்வலத்தில் சமுதாய பாடல்களைப் பாடினராம்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பூ.மகாராஜன்(22) என்பவர் சமுதாய பாடல்களைப் பாடிய இளைஞர்களை கண்டித்தாராம். அதையடுத்து ஏற்பட்ட தகராறில் மகாராஜனை கதிர்வேல் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் தாக்கி, மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து கதிர்வேல் மற்றும் சுந்தரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai