Enable Javscript for better performance
விவசாயியிடம் பணம் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறில் கடையில் அமர்ந்திருந்த விவசாயியிடம் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கயத்தாறையடுத்த கூட்டுப்பண்ணை பன்னீர்குளத்தைச் சேர்ந்த பாலகுருசாமி மகன் விவசாயி கனகராஜ்(45). இவர், தனது விவசாயப் பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை வியாழக்கிழமை கயத்தாறில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்துவிட்டு ரூ. 70ஆயிரத்துடன் அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்று மோட்டார் வாங்குவதற்காக அமர்ந்திருந்தாராம். அப்போது கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரிடம் பல்ப் கேட்டாராம். அப்போது பல்ப் எடுக்க உள்ளே சென்ற போது அங்கு அமர்ந்திருந்த கனகராஜ் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மற்றொரு நபருடன் தப்பிச் சென்றுவிட்டராம்.  இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து  பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai