Enable Javscript for better performance
விவசாயி கொலை வழக்கு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே  விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    முக்காணியைச் சேர்ந்தவர் மாடசாமி(எ)கோபால் (53). விவசாயியான இவர்,புதன்கிழமை இரவில் அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து விவசாயி மடசாமியை கொலை செய்ததாக முக்காணியைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் முத்து (30), அவரது சகோதரர் மலையாண்டி (26), உறவினர் மாரியப்பன் (30) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இரு வீடுகளுக்கு தீ வைப்பு: இந்நிலையில் முக்காணியில் உள்ள மாடசாமியின் உறவினர்கள் மலையாண்டி மற்றும் முத்துவின் வீடுகளை அடித்து நொறுக்கி தீவைத்துள்ளனர். தீயில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸா  வழக்குப் பதிந்து முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி நயினாரை(39) கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai