சுடச்சுட

  

  ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியை உடனே தொடங்க மதிமுக வலியுறுத்தல்

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 12th June 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் எஸ். ஜோயல் வலியுறுத்தியுள்ளார்.

  ஸ்ரீவைகுண்டம் அணையை விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடன் அவர் வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வார அனுமதி அளித்துள்ளது.

  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்தான் அணையைத் தூர்வார விடாமல் தடுத்துவருவதாக இதுவரை மாநில அரசு கூறிவந்தது. இப்போது அந்தத் தடை நீங்கிவிட்டதால் தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்.

  142 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, மண்மேடாகிப்போன அணையை, வரும் பருவமழைக் காலத்துக்கு முன்பாக தூர்வாரி, ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை இனியேனும் சேமித்துவைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவில்லை எனில், மதிமுக பொதுச் செயலர் வைகோவிடம் ஆலோசனை பெற்று அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.

  மாவட்ட அவைத் தலைவர் காசிராஜன், முன்னாள் மாவட்ட விவசாய அணிச் செயலர் பேரூர் சிவஞானவேல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர்கள் ராஜகோபால்(மேற்கு), உமரி அன்பழகன் (கிழக்கு), நகரச் செயலர் வள்ளிமுத்து, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் குமார், கருங்குளம் ஒன்றிய இளைஞரணிச் செயலர் சுடலை, மாநகர வழக்கறிஞரணி பொன்லிங்கம், தொண்டரணி முத்துராமலிங்கம், விவசாயிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai