சுடச்சுட

    

    அகில இந்திய கைப்பந்து சென்னை ஐஓபி அணி வெற்றி

    By தூத்துக்குடி  |   Published on : 13th June 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை ஐஓபி அணி வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு மெர்ந்க்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்டக் கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    5ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் பிரபாகரன், தூத்துக்குடி வஉசி கல்லூரிச் செயலர் ஏபிசிவீ சொக்கலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை ஐஓபி அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 25-20, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் ஐஓபி அணி கைப்பற்றியது.

    இதையடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு போலீஸ் அணி 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றியது. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்படைந்தது. இருப்பினும், அடுத்த செட்டை 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய சென்னை ஐஓபி அணி இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai