Enable Javscript for better performance
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயில் ஆனி திருவிழா: நாளை கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயில் ஆனி திருவிழா: நாளை கொடியேற்றம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 13th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திரப் பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி சனிக்கிழமை விநாயகர் திருவிழா நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு நால்வர் சுவாமிகள் புறப்பாடு, மாலை 6 மணிக்கு திருக்காப்பு கட்டுதல் ஆகியன நடைபெறுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை காலை 7.15-க்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஸ்ரீதிருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரப் பணி வீதியுலா நடைபெறும். திங்கள்கிழமை காலை 9மணிக்கு சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதியுலா நடைபெறும். இரவு 8.30-க்கு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி, தேவசேனா ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மற்றும் அம்பாள் நால்வரும் சண்டிஸýவருடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும்.

    8ஆம் திருநாளன்று (ஜூன் 21) காலை 8 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனமும், வீதியுலாவும் நடைபெறும். இரவு 7மணிக்கு ஸ்ரீநடராஜர் பச்சை சாத்தி தரிசனமும் வீதியுலாவும் நடைபெறும்.

    10 ஆம் திருநாளன்று (ஜூன் 23) காலை 8.30-மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா, 10.30-க்கு தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்தவர்ண காட்சி வீதியுலா ஆகியன நடைபெறுகின்றன.

    ஏற்பாடுகளை பக்த ஜன சபை தலைவர் எம்.எஸ்.எஸ். சண்முக வெங்கடேசன், செயலர் பி.கே.எஸ்.கந்தையா பிள்ளை, பொருளாளர் எஸ்.அரிகிருஷ்ணன், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai