இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
By கோவில்பட்டி | Published on : 13th June 2015 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில், கோவில்பட்டியில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஆழ்வாரப்பன் தலைமை வகித்தார். செயலர் சின்னராஜ், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்டச் செயலர் மணிமுத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மோட்டார் வாகனச் சட்ட திருத்தங்களை கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு சட்டத்தால் உருவாகும் ஆபத்துகள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பேசினர்.