சுடச்சுட

  

  "ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'

  By தூத்துக்குடி  |   Published on : 13th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணியிடத்துக்கு தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி (பெண்) பணியிடத்துக்கு, 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 50 வயதுக்குள்பட்ட தன்னலம் கருதாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  சேவை மனப்பான்மையுடைய பொது தொண்டாற்ற வேண்டும் என்ற முனைப்புடைய தகுதி வாய்ந்தவர்கள் காவல் ஆய்வாளர், மாவட்ட தனிப்பிரிவு, மாவட்ட காவல் அலுவலகம், தூத்துக்குடி - என்ற முகவரியில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai