சுடச்சுட

  

  தூத்துக்குடியில், மாவட்ட ஓய்வுபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு, மாவட்டக் கிளை சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வில்சன் பர்னபாஸ், பொருளாளர் வில்சன் வெள்ளையா,  துணைத் தலைவர் பால்பாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ், மாநிலப் பிரதிநிதி நவேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

  மத்திய அரசு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3500 வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மாதம்தோறும் ரூ. 500 மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai