சுடச்சுட

  

  கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  By தூத்துக்குடி  |   Published on : 13th June 2015 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு கடும் வட்டி விதிப்பை தடை செய்யும் சட்டத்தை 2003இல் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் தின வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்டவைகள் கந்து வட்டி என கணக்கிடப்படும். கந்துவட்டி கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.

  எனவே, கடன் பெறுவதற்கு முன் கடன் கொடுப்போர் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்களில் அவர்களது வாக்குறுதிகளான உடனடி கடன், மிக குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும் உரிமம் பெறாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

  கடன் பெறும்போது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள், வங்கி பரிவர்த்தனை அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனத்தினரிடம் கடன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

  ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்துள்ள வங்கிகள் அல்லாத நிதி நிறுவனத்தினர் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்பட மாட்டாது. எனவே, கடன் பெறும் முன்னர் அதற்கான நிபந்தனைகள், ஒப்பந்தங்கள், வட்டி விகிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்து ஆண்டுக்கு எவ்வளவு வட்டி என்பதனை கண்டறிந்து அதன் பின்பு கடன் பெறுவது தொடர்பாக முடிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

  மேலும், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்துள்ள வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

  எனவே கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai