சுடச்சுட

    

    கல்லூரி மாணவியைக் கடத்தியதாக பாலிடெக்னிக் மாணவர் கைது

    By சாத்தான்குளம்  |   Published on : 13th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலிடெக்னிக் மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண், சாத்தான்குளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கக்கன் மகன் பாலிடெக்னிக் மாணவர் அரவிந்த் (21) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்த மாணவி, திடீரென மாயமானாராம். இது குறித்து அவரது தாயார் சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை நடத்தியதில், மாணவியை அரவிந்த் கடத்திச் சென்று திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை சென்ற போலீஸார் இருவரையும்  மீட்டு சாத்தான்குளம் கொண்டு வந்தனர். விசாரணையில், நந்தினியை அரவிந்த் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததாம். இதையடுத்து அரவிந்தை போலீஸார் கைது செய்து, மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.3

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai